என்ன வேணும்? என்ன வேணும்? என்று காதல் செய்ய ஆரம்பித்த இந்த ஆறு மாத காலத்தில் கேட்க்கும் போதெல்லாம், எனக்கு ஒன்னுமே வேணாம் மாமா.
நீ மட்டும் போதும் என்று சொன்ன ரோஜா விடம் இருந்து வந்த இந்த கேள்விகள் பாரதிக்கு புதிதாக இருந்தது.
அமைதியாக இருந்த பாரதியிடம்
என்ன மாமா கேக்கட்டுமா?
என்ன கேக்கப்போற?
கேக்கட்டுமா? வேணாமா? அத மட்டும் சொல்லு.
ம் ஓகே குட்டி கேளுடி.
நீ என்ன நிஜமாவே லவ் பண்றியா ? கல்யாணம் பண்ணிப்பயா ?
என்னடி லூசு மாதிரி கேக்குற.
நான் கேட்டதுக்கு பதில சொல்லு மாமா.
ஏன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா ?, இல்லையா ?
இருக்கு மாமா.
அப்ரம் எதுக்கு டி இந்த மாதிரி கேள்வி தோணுது.
சரி மாமா நான் கேக்குறேனு தப்பா நினைக்கக் கூடாது.
இப்டி கேக்குறதுக்கு நீ கேக்காமலே இருக்கலாம். சரி கேளு.
ஒரு வேளை நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண முடியாம போனா என்ன செய்வ மாமா?
என்னடி கேள்வி எல்லாம் வித்தியாசமா இருக்கு ? என்னை கோபப் படுத்தி பாக்குறியா ?
அதெல்லாம் இல்ல மாமா. நீ இப்ப சொல்லு. நான் ஏன் ? இப்டி கேட்டேனு கடேசில சொல்றேன்.
சரி நான் என்ன சொல்வேணு நீ எதிர்பாக்குற ?
அத கடேசில சொல்றேன்.
உன்ன கல்யாணம் பண்றதுக்கு நீ என்னென பிரச்சனை இருக்குனு நினைக்கிறயோ அதை எல்லாம் சால்வ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிப்பேன். நம்பிக்கை தான் டி வாழ்க்கை.
சரி இப்ப சொல்லு ஏன் டி திடீர்னு எம்மேல இப்டி ஒரு சந்தேகம் ?
சந்தேகம் இல்ல மாமா.
காதலனை எப்படி டெஸ்ட் பண்ணுவது ? அப்டினு ஒரு புக் ல படிச்சேன் அதான் கேட்டேன்.
அடிப்பாவி, சரி உன்னோட டெஸ்ட் ல நான் pass ஆயிட்டேனா இல்லை fail அ.
இப்டி எல்லாம் கேள்வி கேட்கும் போது. உம்மேல சத்தியமா காதலிக்கிறேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் இப்டி சொல்றவங்க எல்லாம் பொய்யா லவ் பண்றாங்கனு படிச்சேன்.
அப்போ நான் ?
நீ பாசாயிட்ட மாமா.
நாந்தான் மாமா உனக்கு ஏத்த பொண்ணு இல்லை.
ஏன் டி இப்டி சொல்ற ? நான் வேணும்னா உனக்கேத்தாப்ல மாறிக்கிறேன்.
சும்மாதான் சொன்னேன் நீங்க என்ன சொல்வீங்கனு பாக்குறதுக்கு
good night, sweet dreams என்று
தொலைப்பேசி உரையாடலை துண்டித்தாள்.
ஒரு வாரம் கழித்து நண்பனிடம் இருந்து ஃபோன்.
மச்சான் உன் ஆளு ரோஜாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.
அப்போதுதான் பாரதிக்கு புரிந்தது
அன்று கேட்ட கேள்விகள் இந்த செய்தியை தாங்கிக் கொள்ள தயார் படுத்தினாள் என்று.
இது என் முதல் சிறுகதை முயற்சி ஏதேனும் தவறு இருந்தால் என்னை திருத்தவும்.
நன்றியுடன்
பாலா
இது பத்தாது தம்பி இன்னும் நல்லா எழுதப் பழகனும்
பதிலளிநீக்கு