புதன், செப்டம்பர் 28, 2011

பணம் காய்க்கும் மரம்

 பாதுகாப்பிற்கு வேலி இல்லை
 தண்ணீர் ஊற்ற ஆளும் இல்லை
 நட்டவனுக்கோ இதனைப் பற்றிய
 கவலை இருந்தும்
ஒன்றும் பயனில்லை.....


 தனக்கான உணவை
 தானே தேடிக்கொண்டு
 வளர்ந்த  மரத்தின் நிழலில்
 கனிகளைப் பறிக்க ஆயிரம்
 சுய நலவாதிகள்.  



வறட்சியால் தன் இலைகள் உதிர்ந்த பின்பும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கனிகளைத் தருவது போல தனது இன்பத்தை தொலைத்துவிட்டு தன் அப்பா அம்மாவின் சொந்த வீடு கனவு, தம்பியின் படிப்பு, தங்கயின் திருமணம் என்ற சுமைகளைத் தாங்கிக் கொண்டு அவர்களின் பிரிவில் இரவில் தூக்கம் மறந்து பகலில் பணத்தை தேடிக் கொண்டு அலையும் என்னைப் போன்று பணம் காய்க்கும் மரங்களாகவே மாறிவிட்ட வெளிநாட்டில் பணி செய்து கொண்டிருக்கும் மனிதர்களின் துயரத்தை சொல்ல ஒரு சிறு முயற்சி.

மனிதர்களின் கண்களுக்குத்தான் தன்னுடய நிலையை மற்றவர்களுக்கு மிகவும் எளிதாக  உணர்த்தக் கூடிய சக்தி உண்டு.  நான் அதுவரை பார்க்காத ஒரு வித ஏமாற்றம், அழுகை, இந்த வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை என்ற மன நிலையில் மிகவும் சோகமாக இருந்த என் நண்பனைப் நான் கண்ட சில வினாடிகளில் தன் துயரத்தை மறைக்க அந்த இடத்தை விட்டு விலக முயன்றவன் என்னைப் பார்த்தவுடன் ஓ வென்று அழ தொடங்கிவிட்டன்.

நான் ஏன் என்று கேட்டவுடன் அவன் சொல்லிய காரணத்திற்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது.  திருமணத்தில் தான் ஒருவனுடய வாழ்க்கை ஆரம்பமாகிறது. தன் மனைவி  ஆறு மாத கர்ப்பமாக இருந்த பொழுது இங்கு வேலைக்கு வந்தவன் தன் மனைவியின் சந்தோசம், வலி, வேதனை, துக்கம் ஆகிய அனைத்தயும் தனது தொலைப் பேசி உரையாடல் மூலமே தன்னை வருத்திக் கொண்டு மகிழ்ச்சியாக இருதவனுக்கு அன்றய தினம் தன்னுடய குழந்தையின் முதல் அழுகையை கேட்க்க முடியாத ஏக்ககத்தில் தான் அழுதுகொண்டிருந்தான்.  ஆம் அன்றய தினம் அவனுடய மனைவிக்கு பிறசவ நாள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக