செவ்வாய், செப்டம்பர் 27, 2011

தமிழ்- மொழிப்பற்று

                                       தமிழ் பேசினால் அவமானம்


"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிமையானது       வேறொன்றும் இல்லை".      என்றான் பாரதி 


அப்படியானால் 


என் பாரதி காண விரும்பிய தமிழகம் இதுவா?. இன்றய தமிழனிடம்  மொழிப்பற்று இல்லை.
 ஏன்?  என்றோ அவன் ஜாதிப்பற்றில் கலந்து விட்டான் என்பதனால்.

        உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் தாய்ப்பால் போன்றது     அவரவரின் தாய்மொழி. 


       இந்த உலகின் மிக உயர்வான பண்புகளைக் கொண்ட இனம் நம் தமிழினம்.
தாய் மொழி, தமிழ் என்று இனத்தாலும் மொழியாலும் மட்டுமே அடயாளப் படுத்தி பெருமைப் படவேண்டிய நாம் அத்தகைய மொழியை பேசுவதற்கு தயங்குகிறோம்.


  மொழியைப் பற்றி தந்தை பெரியார் பேசிய போது  ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு தேவைப்படும் பற்றுகளுள் முதன்மையானது மொழிப்பற்றே ஆகும். அத்தகைய மொழிப்பற்று இல்லாதவனிடத்து தேசப்பற்றும் இருக்காது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழி அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆதலால் தமிழர்களுக்கு மொழிப்பற்று பெருக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்றார்.   


ஒருவனின் கற்பனையில் உதிக்கும் எந்த ஒரு செயலும் சிறப்பாக வெளிப்படுத்தப் படுகிறதென்றால் அதற்கு ஒரே காரணம் அவன் தாய் மொழியில் சிந்திக்கிறான்.


நம் அன்றாட வாழ்க்கையில் பேசும் பேச்சில் உதிற்கும் சொற்கள் நம்மைப் பற்றி பிறருக்கு அறிமுகப் படுத்திவிடும். 
        
                     நம் சொற்களைக் கொண்டு
                     நம் உணர்ச்சிகள் மதிக்கப்படும்......


                     நம் உணர்ச்சிகள் கொண்டு 
                     நம்  செயல்கள் மதிக்கப்படும்........


                     நம் செயலைக் கொண்டு 
                     நம் வாழ்க்கை தீர்மாணிக்கப்படும்.


அத்தகய வாழ்க்கை நன்றாக இருக்க நாம் நமது தாய் மொழியில் சிந்திப்பதால் மட்டுமே சாத்தியப் படுகிறது.


நாம் நமது மனதிற்கு சரி எனப் படுவதை மட்டும் செய்வோம்.


     போற்றுவோர் போற்றட்டும் - புழுதி வாரி
     தூற்றுவோர் தூற்றட்டும்


     ஏற்றதோர் கருத்தினை எடுத்துரைப்பேன்
     எவன் வரினும் நில்லேன் அஞ்சேன்


என்ற் கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு செவி கொடுப்போம்.








உணர்வில் தமிழனாக இரு.      ஒற்றுமையில் இந்தியனாக இரு.........






           



1 கருத்து: