ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

எங்கேயும் எப்போதும்...

எங்கேயும் எப்போதும்
திரைக்கதைக்கு பாக்யராஜ் தான் என்று நினைதுக்கொண்டிருக்கும் போது நான் இருக்கேன் என்று அறிமுகமாகிறார் இளம் இயக்குனர் சரவணன்.  
ஏ.ஆர்.முருகதாஷ் ன் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஆகும் முதல் படம்.

 நம் வாழ்வில் அன்றாடம் நிகழும் விபத்தைப் பற்றிய செய்தியை அன்றாடம் செய்தித்தாளை படிப்பதோடு மட்டும் மறந்து விடுகிறோம். அந்த விபதிற்கு பின்னால் உயிர் இழந்த குடும்பங்களை நினைத்துப் பார்ப்பதில்லை இதை ஒரு செய்தியாக சொல்லாமல் அழகான இரண்டு காதல் ஜோடிகள் பயணம் செய்யும் பேருந்து மற்றும் சக பயணியாக இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்கள் மூலம் வேகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து நம்மை உழுக்கி எடுத்து விடுகிறார் இறுதிக்காட்சியில். 

 படத்தின் முதல் காட்சியே இரண்டு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொள்வதாக அமைத்து நம்மை திரை அரங்கின் இருக்கையில் ஃபெஃபிகால் போட்டு அமர்த்திவிடுகிறர். 

அதிலிருந்து ஃப்ளஷ்பேக் ல் செல்கிற்து திரைக்கதை.  ஃப்ளஷ்பேக் ல் இருந்து அடுத்து ஒரு ஃப்ளஷ்பேக் என்றாளும் நம்மை குழப்பாமல் தெளிவான திரைக்கதையுடன் ரசிக்க வைக்கிறார்.
 முதன் முதலாக சென்னைக்கு நேர்முகத் தேர்விற்கு வரும் அனன்யாவை அழைத்துப் போக வேண்டிய அக்கா வரமுடியாமல் போக அந்த பொறுப்பு சரவ் இடம் வந்து சேர்கிறது.

  சென்னையை பற்றிய பயத்தினாலும் அப்பாவித்தனமும்  அதிகாப்படியான முன் ஜாக்கிரதை கதாப்பாத்திரத்தில் முதலில் சரவ் மீது சந்தேகப்படுவாதகட்டும் கூட நடந்து போகும் போது அதற்குப் பின் மெல்ல காதல் வயப்படுவது அனைத்தயும் ரசிக்க வைக்கிறார். 
அனன்யாவின் செய்கைகள் சரவ்க்கு எரிச்சலைக் கொடுத்தாலும் இன்றய சென்னை ஐ டி பையனாக ரசிக்க வைக்கிறார். 

அடுத்து ஜெய்-அஞ்சலி.
 முகம் தெரியாமல் தூரத்தில் இருந்தே சைட் அடிக்கும் ஜெய் ரூம்ற்கு திடீர் என்று அது நான் தான் என்று ஆஜர் ஆகும்  முதல் காட்சியில் இருந்து ஜெய்யை அங்க போ இங்க வா என்று அழயவைத்து அலட்சியமாக இ லவ் யு சொல்லும் வரை நமக்கும் இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று ஏங்க வைக்கிறள். 
ஜெய் தனது அளவான நடிப்பில் அசத்தி இருக்கிறார். மற்றும் பேருந்தில் பயனம் செய்யும் இளம் தம்பதிகள், பயனத்தில் காதல் வளர்க்கும் இளஞ்ஜோடி. துபாய் ல் இருந்து தனது 5  வயது  குழந்தையை முதன் முதலில் பார்க்க வரும் தந்தை என் அனைவரும் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.  
படத்திற்கு திரைக்கதைக்கு இணையாக  இயல்பான வசனங்கள்  வேல்ராஜா வின் ஒளிப்பதிவும், சத்யா வின் இசையும் மிகப் பெரிய பலம்.  விபத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு தமிழ் படம் இது வரை வந்தது இல்லை.  எங்கேயும் எப்போதும் அது காதல் ஆனாலும்  சரி விபத்து ஆனலும் சரி.

2 கருத்துகள்: