இந்த பதிவ எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலயே !
"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I
இலக்கியம், கவிதை, எழுத்து, இசை, சினிமா, நடனம், புகைப்படம் என அனைத்திலும் ஒரு படைப்பாளியாக இருக்க எனக்கு ஆர்வம் இருந்தாலும் இவற்றிற்கு தேவையான எந்த அறிவும் என்னிடத்தில் இல்லை. ஆனால் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான வேகம் உழைப்பு என்னிடத்தில் உண்டு.
இப்படி கற்றுக்கொள்ள எந்த ஒரு சூழ்நிலையும் அமையவில்லை, நானும் என்னை நம்பி இருக்கின்ற குடும்பத்திற்காக அமைத்துக்கொள்ள விரும்பவும் இல்லை. என்னால் ஒரு நல்ல ரசிகனாக மட்டுமே இருக்க முடிகிறது.
இதில் புகைப்படம் எடுப்பதை தவிர மற்ற அனைத்தும் நீண்ட புத்தக வாசிப்பு மூலமாகவோ அல்லது திறமையான ஆசிரியர் மூலமாகவோ கற்றுக்கொள்ள முடியும். அதனால் புகைப்படம் எடுக்க தேவையான ஒரு கேமரா வாங்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை சென்ற மாதம் நிறைவேறியது.
என்னடா இவன் புகைப்படம் தந்த பரிசுனு தலைப்ப வச்சிட்டு எதயோ எழுதுறானு பாக்குறீங்களா, அதான் சொன்னனே எப்படி ஆரம்பிக்கிறதுனு ?
சரி இப்ப தலைப்புக்கு வரலாம்...................
ஆயிரம் வார்த்தகளால் சொல்ல முடியாத அல்லது எழுத முடியாத ஒரு நிகழ்வை ஒரே ஒரு புகைப்படத்தால் நம்மை உணர வைக்க முடியும்.
இப்படி தான் சொல்ல வந்த கருத்தை இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை எடுத்தவர்க்கும் புரிய வைத்த ஒரு புகைப்பபடத்தின் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சமீபத்தில் தெற்கு சூடன் விடுதலைப் பெற்று தனி நாடாக அறிவிக்கப்பட்ட செய்தியை படித்தபோது, அங்கு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த ஒரு புகைப்படத்தின் நினைவும் வந்தது.
நீங்கள் பார்க்கும் உலகப் புகழ் பெற்ற இந்த புகைப்படம் 1994 ஆம் வருடத்தின் pulitzer விருது பெற்ற 1993 ஆம் ஆண்டு சூடானில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
சூடான் உள்நாட்டு போர் மற்றும் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கி பசியால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருந்த நேரத்தில் ஐ.நா சபையின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட முகாமை நோக்கி சென்ற ஒரு குழந்தையை தனக்கு உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்து.
இந்த புகைப்படம் kevin carter என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது.
kevin carter
தென் ஆப்பிரிக்காவில் பிறந்து விளையாட்டுதுறை புகைப்படக்காரராக தனது வேலையை தொடங்கிய கெவின். 1993 ஆம் வருடம் ஐ.நா திட்டத்தின் மூலம் சூடனுக்கு உணவு கொண்டு சென்ற விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
அப்பொழுது அவர் எடுத்த இந்த புகைப்படம் New York பத்தரிக்கையில் வெளிவந்த சமயம் பல ஆயிரம் மக்கள் அந்த குழந்தையை பற்றி விசாரிக்க தொடங்கினார்கள். ஆனல் அந்த புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கைக்கோ, புகப்படம் எடுத்த கெவினுக்கோ அந்த குழந்தையைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
இந்த புகைப்படம் வெளிவந்தபோது "st petersburg Times" என்ற பத்திரிக்கை "அந்த குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்க தயாரான அந்த புகைப்பட காரனும் ஒரு கொடூர மிருகம் தான்" அந்த காட்சியின் மற்றொரு பருந்து அவர் என்று விமர்சனம் செய்தது.
pulitzer விருது பெற்றாலும் இந்த புகைப்படத்தால் பல கண்டனங்களுக்கு ஆளானார். இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மன உளைச்சல்கள் அதிகரித்தன.
இதன் விளைவாக 1994 ஜூலை 27 ஆம் தேதி தனது காரின் புகை போக்கியில் ஒரு ரப்பர் குழாயை இனைத்து மறுமுனையை காருக்குள் வைத்து பக்க கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கி காதில் walkman ஐ மாட்டிக் கொண்டு உள்ளே அமர்ந்து விட்டார். பின்பு அவரின் உடல் கண்டெடுக்கபட்ட போது கார்பன் மோனாக்சைடினால் இறந்திருக்கிறார் என தெரிய வந்தது.
குற்றயுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்ட
kevin வயது 33. pulitzer விருது பெற்ற இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை.தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.
"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for
kevin வயது 33. pulitzer விருது பெற்ற இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை.தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.
"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for
debts ... money!!! ... I am haunted by the vivid memories of
killings and corpses and anger and
pain ... of starving or wounded children, of
trigger-happy madmen, often police, of killer
executioners ...
மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில்
மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில்
"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I
may pray that He will protect this little boy, guide and deliver him
away from his misery, I pray
that weDear will
be more sensitive towards the world around us and not be blinded be our own
selfish nature and interests"
பசியின் கொடூரத்தை உணராமல் நாம் எவ்வளவு உணவை வீணாக்குகிறோம். நாம் அனைவரும் இந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்கு