வெள்ளி, அக்டோபர் 28, 2011

ஏழாம் அறிவு- விமர்சனம்



ஹிப்னாட்டிசம் (நோக்குவர்மம்) என்ற ஒரு கலையினால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையில், எவ்வளவோ சூழ்னிலை அமைந்தும் சூர்யாவையும், ஷ்ருதியையும், கொல்ல வரும் ஹிப்னாட்டிசம் கலையை முழுமையாக கற்ற வில்லனால் முடியவில்லை என்ற ஒரே ஒரு லாஜிக் மீறலே படத்தினை பார்த்து,  ரசிப்பதற்கு பதிலாக பார்க்க மட்டுமெ முடிகிறது.

மேலும் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஏ,ஆர்.முருகதாஷ், படம் வெளிவருவதற்கு முன்னால்அளித்த பேட்டியும், அவரின் அதிகமான தன்னம்பிக்கையும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய அளவிற்கு, அவருடைய திரைக்கதை என்னைப் போன்ற சாதரன ரசிகனும் யூகிக்க கூடியதாக இருப்பதனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.  தேவை இல்லாமல் இடையிடையே செருகப்பட்ட பாடலும் திரைக்கதைக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

 ஆனால், நம்மில் அதிகம்பேர் அறியாத போதிதர்மன் என்கின்ற தமிழரைப் பற்றி அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனர்க்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்.

  போதிதர்மனாக வாழ்ந்து தனது நடிப்பில் வெற்றி பெற்ற சூர்யா, சர்கஷ் கலைஞன் அரவிந்த் ஆக தோற்றுவிட்டார்.

மருத்துவ ஆராய்ச்சி மாணவியாக ஷ்ருதி. தமிழயும், தமிழனையும் இழிவாக பேசுபவர்களிடம் கோபப்படும் அந்த காட்சியே போதும் கமலின் வாரிசு என்று நிரூபிக்கிறார். ஆனால் ஷ்ருதி, கமலிடம் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் நல்லது. கமல்ஹாசனே ஒரு நிகழ்சியில் தசாவதாரம் படத்தில் எனக்கு ஆங்கிலம் உச்சரிப்பை கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்று பெருமையாக சொன்னார். நீங்கள் தமிழ் ஆசிரியராக மாறுங்கள் கமல்.

   வில்லனாக நடித்து இருக்கும் டோங்க்லீ தமிழ் படத்தில் வரும் வில்லனைப் போல் இல்லாமல் தனது பார்வையாலே மிரள வைக்கிறார்.

   ஹரீஷ் ஜெயராஜ் இசையில் பாடல்களும், பின்னனி இசையும் சுமார் ரகம் தான். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பாடல்களில் மட்டுமே தெரிகிறது.

  சரி இப்போ படத்தோட கதைக்கு போகலாம்.

5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, தற்காப்பு கலையிலும், மருத்துவத்திலும் சிறந்து விளங்கிய போதிதர்மனின் வாழ்க்கை குறிப்புடன் படம் தொடங்குகிறது. சீனாவில் அவர் செய்த உதவிகளும், தற்காப்பு கலையும்,சிறுமியின் நோயை குணப்படுத்திய அவருடய மருத்துவ அறிவும் அந்த மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த கலையை அந்த மக்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார். இப்படிப்பட்ட ஒருவன் தங்கள் நாட்டை விட்டு போகக் கூடாது என்பதனால் அவருக்கு விஷம் வைத்து கொல்கிறார்கள். உடனடியாக கதை இந்த காலத்தில் இருந்து தொடர்கிறது.

  பயோ வார் (BIO WAR) மூலம் சீனா இந்தியாவை அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஷ்ருதி, போதிதர்மனின் வாரிசான சூர்யாவின் DNA வைத் தூண்டி அவருடய திறமையை வெளிக்கொண்டுவரும் முயற்சியை அறிந்து அவர்களை கொல்ல டோங்க்லீ என்பவனை சென்னைக்கு அனுப்புகிறார்கள். அவன் சூர்யாவயும்,ஷ்ருதியையும் கொன்றானா அல்லது ஷ்ருதி சூர்யாவின் DNA வைத் தூண்டி அவனையும் சீனாவின் திட்டத்தையும் வென்றார்களா என்று முடிகிறது படம்.

  படதில் வரும் சில வசனங்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நாய்க்கு ஊசி போட்டு நோயை பரப்பும் அந்த காட்சிகளின் பிரமாண்டமும் நம்மை பயமுறுத்துகிறது.

  90 கோடி ரூபாய் வியாபாரத்தை தந்த இந்த படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தமிழின் முக்கியமான படத்தின் வரிசையில் சேர்ந்திருக்கும்.

 ஆனந்த விகடனில் நான் எதிபார்க்கு மதிப்பெண்- 43.

2 கருத்துகள்: